×

பூமலை சஞ்சீவிராயர் கோயிலில் பவுர்ணமி கிரிவலம்

பாடாலூர், ஜூன் 18 : பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் உள்ள பூ மலை சஞ்சீவிராயர் மலைக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி கிரிவல விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.இந்த மாதம் 234வது பவுர்ணமி கிரிவல விழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக மாலை 5 மணிக்கு மலையின் அடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள் ஒன்று கூடி கையில் தேங்காய் பூ பழங்களுடன் மலையை சுற்றி கோவிந்தா கோவிந்தா என்று பக்தி பரவசத்துடன் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர்.பின்னர் வழித்துணை ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமிக்கு பால், பன்னீர், மஞ்சள், புஷ்பம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்க பட்டது.பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் வடபழனி என்றழைக்கப்படும் தண்டாயுதபாணி சுவாமி கோயில் மலை மீது அமைந்துள்ளது. இந்த மலையைச் சுற்றி ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று கிரிவலம் நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த மாதமும் பவுர்ணமி கிரிவலம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கிரிவலத்தை முன்னிட்டு தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.பின்னர், மலை அடிவாரத்தில் அலங்கரிக்கப்பட்ட முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர், மலையைச் சுற்றி பக்தர்கள் கிரிவலம் வந்தனர். பின்னர் மலைக்கோவிலை சுற்றி வெள்ளி தேர் இழுத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Tags :
× RELATED நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும்: கலெக்டர் அதிரடி உத்தரவு